Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொன் ஆனந்தம்
வெருகல் பிரதேச செயலாளரை தாக்கியதுடன், அவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் 29 வயதுடைய ஒருவரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.முபாரிஸ் உத்தரவிட்டுள்ளார்.
இச்சந்தேக நபரை மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் அன்றையதினம் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வெருகல் பகுதியில் கையளிக்கப்படும் வீட்டுத்திட்டம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக வெருகல்; பிரதேச செயலகத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை பொதுமக்கள் சென்றிருந்தனர்.
வீட்டுத்திட்டம் தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, பிரதேச செயலாளருடன் ஏற்பட்ட முறுகலை அடுத்து, கைகலப்பு இடம்பெற்றுள்ளது. இக்கைகலப்பின்போது, பாதிக்கப்பட்ட பொதுமகன் ஒருவரும் சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கைகலப்புச் சம்பவம் தொடர்பில் மேற்படி சந்தேக நபர் நேற்றுக் (9) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏனைய 3 பேர் தேடப்பட்டு வருகின்றனர் எனவும் பொலிஸார் கூறினர்.
அரசாங்கக் காணி ஒன்றில் தனியாரினால் கட்டடம் கட்டப்பட்ட நிலையில், அக்கட்டட நிர்மாணப் பணியை நிறுத்துமாறு கூறி தன்னால் கடிதம் அனுப்பப்பட்டதை அடுத்தே, தன் மீது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது என வெருகல் பிரதேச செயலாளர் எஸ்.தயாபரன் தெரிவித்தார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago