2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வெருகல் பிரதேச செயலாளரை தாக்கியவர் கைது

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

வெருகல் பிரதேச செயலாளரை தாக்கியதுடன்,  அவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் 29 வயதுடைய ஒருவர்  இன்று (9) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏனைய 3 பேர் தேடப்பட்டு வருகின்றனர் எனவும் பொலிஸார் கூறினர்.

வெருகல் பிரதேச செயலகத்துக்குரிய வடிகான்களைச் சுத்தப்படுத்தும் பணி கடந்த வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அவ்வேளையில்; வெருகல் பிரதேச செயலாளரைச் சந்திப்பதற்காக 4 பேர் வந்தபோது, அவரைச் சந்திக்க முடியாது என்று பிரதேச செயலகத்தின் சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.  

இந்நிலையில், ஆத்திரமடைந்த 4 பேரும் பிரதேச செயலாளரைத் தாக்கியுள்ளனர் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் கூறினர்.

அரசாங்கக் காணி ஒன்றில் தனியாரினால் கட்டடம்  கட்டப்பட்ட நிலையில், அக்கட்டட நிர்மாணப் பணியை  நிறுத்துமாறு கூறி தன்னால்  கடிதம் அனுப்பப்பட்டதை அடுத்தே, தன் மீது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது என வெருகல் பிரதேச செயலாளர் எஸ்.தயாபரன் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .