Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா
திருகோணமலை, வெருகல் பிரதேசத்திலுள்ள சிறிய குளங்களான கிரான் குளம், பனிச்சங்குளம், கொல்லங்குளம் ஆகிய மூன்று குளங்களையும் புனரமைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அப்பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.
அத்துடன், இப்பிரதேசத்திலுள்ள இலங்கத்துரை அலை மகள் வித்தியாலயம் மற்றும் உப்பூரல் வித்தியாலயத்தில் தரம் ஒன்பது வரை வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்விரு வித்தியாலயங்களிலும் தரம் ஐந்து வரையே இதுவரை காலமும் வகுப்புகள் இருந்து வந்தன.
வெருகல் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை பிரதேச செயலகத்தில் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதியமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே தலைமையில் நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026