2025 ஜூலை 28, திங்கட்கிழமை

வெருகலில் சர்வதேச சுனாமி ஒத்திகை நிகழ்வு

Gavitha   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

இந்தியன் சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யும் சர்வதேச சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வு இலங்கையின் 14 கரையோர மாவட்டங்களிலும் எதிர்வரும் 07ஆம் திகதி காலை 9 மணிதொடக்கம் 10 மணிவரை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் திருகோணமலை மாவட்ட நிகழ்வு வெருகல் பிரதேச செயலக இலங்கை முகத்துவார கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைபெறவுள்ளது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் வழிகாட்டுதலின்கீழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் விராஜ் திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கையில் முதல் தடவையாக சர்வதேச சுனாமி ஒத்திகை நிகழ்வு ஏற்பாடு நடைபெறவுள்ளது. இலங்கையுடன் இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளும் இணைந்து இந்த ஒத்திகையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .