2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

வடிசாராயத்துடன் ஒருவர் கைது

Thipaan   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை, புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லறாவ பகுதியில், 170 லீற்றர் கோடா மற்றும் 750 மில்லிலீற்றர் வடிசாராயம் என்பவற்றுடன், 23 வயதுடைய இளைஞர் ஒருவரை, நேற்று (14) கைதுசெய்துள்ளதாக, புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்தநபர், சாராயம் விற்பனை செய்ய வைத்திருப்பதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, கல்லறாவ காட்டுப்பகுதிக்கு விரைந்து நடத்திய சுற்றிவளைப்பின் போது, அவரிடம் வடிசாராயம் மற்றும் கோடா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்நபர் கைது செய்யப்பட்டார்.

குறித்தநபர், பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில், அவரை ஆஜர்படுத்தவுள்ளதாக புல்மோட்டை  பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .