Niroshini / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை, ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் மூன்று போத்தல் வடிசாராயத்தை வைத்திருந்த ஒருவருக்கு 5,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும் அத்தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆறு மாதம் சிறைத் தண்டனை விதித்து மூதூர் நீதிமன்ற நீதிவான் செவ்வாய்கிழமை (09) உத்தரவிட்டார்.
பூநகரி,ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த 52வயதுடைய ஒருவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் வடிசாராயத்தை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த நிலையில் சேருநுவர பொலிஸார் அப்பகுதியில் மேற்கொண்ட திடிர் சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபரை திங்கட்கிழமை (08) இரவு கைது செய்து, மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, இவ்வாறு நீதிவான் ஐ.என்.றிஸ்வான் உத்தரவிட்டார்.
4 minute ago
16 minute ago
21 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
16 minute ago
21 minute ago
29 minute ago