2026 மார்ச் 23, திங்கட்கிழமை

வடிசாராயம் வைத்திருந்தவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                    

இரண்டரை போத்தல் வடிசாரயத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 58 வயதுடைய ஒருவருக்கு 6,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.                              

இந்த அபராதத்தைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆறு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடுமெனவும் நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் மணற்சேனைப் பகுதியிலிருந்து பாலத்தடிச்சேனைப் பகுதிக்கு இரண்டரைப் போத்தல் வடிசாரயத்தைக் கொண்டு சென்றபோது திருகோணமலை, மூதூர்ப் பிரதேசத்தில் மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .