2025 ஜூலை 26, சனிக்கிழமை

வதிவிடப் பயிற்சி நெறி

Niroshini   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான “பிரதேச தொடர்பாடலாளர்” தொடர்பான மூன்று நாட்கள் வதிவிடப் பயிற்சி நெறியொன்று கண்டி நில்லம்ப திவிநெகும பயிற்சி மண்டபத்தில் இடம்பெற்றது.

கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பயிற்சி நெறி இடம்பெற்றது.

சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் ஊடக அதிகாரி சேனக உபேசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற குறித்த பயிற்சிநெறியில் புத்தளம், இரத்தினபுரி, அநுராதபுரம் மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் இடம்பெறும் சமுர்த்தி வேலைத்திட்டங்களை தெரிவுசெய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட குறித்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரதேச ஊடகவியலாளர்கள் மூலம் ஊடகங்களில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், சமூக வளைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அத்துடன், சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சினால் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமைகளில் வெளியிடப்படும் சமுர்த்தி பத்திரிகையிலும் பிரதேச செயலகங்களில் இடம்பெறும் சமுர்த்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான செய்திகள், கட்டுரைகள் என்பன பிரசுரிப்பதற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

இதற்காகவே தெரிவு செய்யப்பட்ட குறித்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு துறைசார்ந்த நிபுணர்களினால் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அத்தோடு, பிரதேச ஊடகவியலாளர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி அதன்மூலம் பிரதேச மட்டங்களில் இடம்பெறும் சமுர்த்தி வேலைத்திட்டங்களை வெளிப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X