Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.கீத், அப்துல்சலாம் யாசீம்
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில், வலம்புரிச் சங்குகள் இரண்டுடன் மூவரை, நேற்று (16) இரவு தாம் கைது செய்ததாக, திருகோணமலை கடற்படையினர் தெரிவித்தனர்.
கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், மேற்படி வலம்புரிச் சங்குகள் இரண்டையும் விற்பனை செய்யும் நோக்குடன், பேரம்பேசுதலின் போது, குறித்த சந்தேகநபர்களைக் கைதுசெய்து, சேருநுவர பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
பேரம்பேசலின் போது, வலம்புரி சங்குள் இரண்டும் 48 இலட்சம் ரூபாய் பெறுமதி கணிக்கப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், ஹபரனை, சேருவில, மெரவெவ பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட வலம்புரி சங்குகள் இரண்டையும் மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும், சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
34 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago