Editorial / 2019 ஜனவரி 24 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்
திருகோணமலை, உவர்மலை, பெட்ரோல் நிரப்பும் நிலையத்துக்கு அருகில், வலம்புரிச் சங்கை விற்பனை செய்ய முற்பட்ட மூவரை, நேற்றிரவு (23) கைதுசெய்துள்ளதாக, உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை, பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 34, 27, 23 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
உப்புவெளிப் பொலிஸ் நிலையத்துக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, வலம்புரிச் சங்கை விற்பனை செய்ய முயற்சித்த ஓட்டோவில் வந்த மேற்படி மூவரையும், வியாபாரியைப் போல் சென்று கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago