Princiya Dixci / 2016 ஜனவரி 14 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, மயிலகுடாவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபரொருவரைத் தாக்கிப் பயமுறுத்தி ரூ. 30,000 பணம் மற்றும் அலைபேசி ஆகியவற்றைப் பெற்றுக்கொண்ட இருவரை, எதிர்வரும் 19ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் கயான் மீ கஹகே, புதன்கிழமை (13) உத்தரவிட்டார்.
மயிலகுடாவ பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 32 வயதானவர்களுக்கே இவ்வாறு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
மகாதிவுள்வௌ பகுதியைச் சேர்ந்த திலக்கரத்னாகே சமரநாயக்க என்பவர் தெவநிபியவர கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை (12) இரவு இந்த வழிப்பறிக்கொள்ளை இடம்பெற்றதையடுத்து மொறவௌ போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
விசாரணையை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகத்தின் பேரில் குறித்த இவரையும் கைதுசெய்து கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் அலைபேசி ஆகியவற்றையும் மீட்டு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியிருந்தனர்.
6 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
25 minute ago