Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜூன் 12 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
திருகோணமலை, கந்தளாய் சோமாவதி வனவிலங்கு சரணாலயத்துக்குச்; சொந்தமான யானைக் குட்டி ஒன்று வழிமாறிச் சென்ற நிலையில் சனிக்கிழமை (11) மாலை சூரியபுர சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொலிஸாரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட யானைக் குட்டியை குறித்த சரணாலய அதிகாரிகளிடம் சூரியபுர சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் சீனி ஆலைக்குச் செல்லும் பாதையில் உள்ள 20ஆம் மைல்கல் பகுதியிலேயே குறித்த யானை மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலைத் தொடர்ந்து, பொலிஸார் உடனடியாக குறித்த இடத்துக்குச் சென்று யானைக் குட்டியை பாதுகாப்பாக மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
7 minute ago
9 minute ago
23 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 minute ago
23 minute ago
35 minute ago