2026 மார்ச் 23, திங்கட்கிழமை

வழக்குகளுக்கு சமூகமளிக்காதவர் விளக்கமறியலில்

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                 

திருகோணமலை, குச்சவெளியில் சாராயம் வைத்திருந்தமை தொடர்பான வழக்குகளுக்கு சமூகமளிக்காத நபர் ஒருவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவெளி பதில் நீதிவான் சுபாஷினி சித்திரவேல் ஞாயிற்றுக்கிழமை (17)உத்தரவிட்டார்.                         

திரியாய், மதுரங்குடா, செந்தூர் பகுதியைச் சேர்ந்த தியாகலிங்கம் ஜெயசிங்கம் (வயது 33)என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.                        

குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் குறித்த சந்தேக நபர், சாராயம் வைத்திருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சந்தேக நபர் பல வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காததால் சனிக்கிழமை (16)கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.                            

குறித்த சந்தேக நபரை பொலிஸார் குச்சவெளி பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .