Niroshini / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை, மொறவெவ பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி ஒரு கக்கப்பட்டாஸ் வைத்திருந்தமை மற்றும் உடும்புகள் பிடித்தமை போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடைய வழக்குகளுக்கு சமூகமளிக்காத நபர் ஒருவரை இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராசா இன்று செவ்வாய்கிழமை (05) உத்தரவிட்டார்.
மொறவெவ, அவ்வைநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கடந்த 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மொறவெவ பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி கக்கப்பட்டாஸ்(வாய்வெடி)வைத்திருந்தமை மற்றும் உடும்புகள் பிடித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் குறித்த சந்தேக நபருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வந்த வழக்குத் தவனைகளின் போது வழக்குகளுக்கு சமூகமளிக்காததால் குறித்த நபரை மொறவெவ பொலிஸார் திங்கட்கிழமை (04) கைது செய்து, திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago