Niroshini / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலையில் கடந்த மாதம் அனுமதிப்பத்திரமின்றியும் இலக்கத்தகடு தெளிவின்றியும் வாகனம் செலுத்தியமை தொடர்பாக நடைபெற்று வந்த வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காத நபரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை பதில் நீதிவான் சுபாஸினி சித்திரவேல் திங்கட்கிழமை (22)உத்தரவிட்டார்.
திருகோணமலை, லவ்லேன் பகுதியைச் சேர்ந்த 30வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கெதிராக வாகனத்துக்கான இலக்கத்தகடு தெளிவின்மை மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றி திருகோணமலையில் வாகனம் செலுத்தியமை தொடர்பாக பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கில், வழக்குத் தவணைகளுக்கு சமூகளிக்காத நபரை திருகோணமலை பொலிஸார் திருகோணமலை பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026