Princiya Dixci / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தெகிவத்தைப் பிரதேசத்தில் 14 கசிப்பு போத்தல்களை தம் வசம் வைத்திருந்த நபருக்கெதிராக நடைபெற்று வந்த வழக்கில் குறித்த நபர், மூன்று வழக்குத் தவணைகளுக்கு சமுகமளிக்காததால் அவரை, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐஎன்.றிஸ்வான் உத்தரவிட்டார்.
தெகிவத்தை, சமகிபுர பகுதியைச் சேர்ந்த ஜெயதிஸ்ஸ ரணதூங்க வயது (52) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் 14 கசிப்பு போத்தல்களை வைத்திருந்த போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நபருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 03 வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நிலையில் பொலிஸார், குறித்த நபரை நீதிமன்றில் ஆஜார்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026