2025 மே 19, திங்கட்கிழமை

வழக்குத் தவணைகளுக்கு சமுகமளிக்காதவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லமுற்பட்ட நபரொருவர் வழக்குத் தவணைகளுக்கு சமுகமளிக்காததால், அவரை, இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.எச்.விஸ்வானந்த பெர்ணாண்டோ, நேற்றுத் திங்கட்கிழமை (15) உத்தரவிட்டார்.

திருகோணமலை, நித்தியபுரி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு காலப்பகுதியில், திருகோணமலையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகின்; மூலம் செல்ல முற்பட்ட அவர், கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

குறித்த நபருக்கெதிராக, திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வந்த வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நிலையிலே, அவர், ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்து செய்யப்பட்டார்.

சந்தேகநபரை, திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X