2026 மார்ச் 19, வியாழக்கிழமை

வழக்கு தவணைக்கு சமுகமளிக்காதவருக்கு பிணை

எப். முபாரக்   / 2018 ஜனவரி 25 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வழக்குத் தவணைக்கு சமுகமளிக்காத நபரொருவருக்கு, இருவரின் கையொப்பத்துடன் பிணை வழங்கி, திருகோணமலை நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, நேற்று (24) உத்தரவிட்டார்.                                 

மட்டக்களப்பு, மனைத்தீவு பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஒருவருக்கே இந்தப் பிணை வழங்கப்பட்டுள்ளது.                           

 2013ஆம் ஆண்டு, சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்றபட்ட வேளையில், திருகோணமலையை அண்டிய கடற்பரப்பில் வைத்து, கடற்படயினரால், குறித்த நபர் கைது செய்யப்பட்டு, திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கில் பிணையில் இருந்த மேற்படி நபர், வழக்குத் தவணையொன்றுக்குச் சமுகமளிக்காது இருந்த நிலையிலே, செவ்வாய்கிழமையன்று (23) மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .