2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வாசிப்பில் இடர்படும் 5ஆம் தர மாணவர்கள்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 11 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன், ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீட், அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்

திருகோணமலை கல்வி வலய குச்சவெளிக் கோட்டப் பாடசாலைகளில் தரம் 05 இல் வாசிப்பில் இடர்படும் மாணவர்கள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.சீ.எல்.பெர்ணாண்டோ, கல்வி அபிவிருத்தி தொடர்பான மேற்பார்வைக்கு நியமித்த குழுவினர், பாடசாலைகளுக்கு விஜயம் செய்த போது இதனை அவதானித்துள்ளனர்.

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளில் குச்சவெளிக் கோட்டம் இன்னும் முன்னேற வேண்டிய நிலையில் இருப்பதற்கான காரணங்களைக் கண்டறியும் பொருட்டு மேற்பார்வை செய்யச் சென்ற வேளையிலேயே இந்தக் குறைபாடு அவதானிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குறைபாட்டை நிவர்த்திக்கத் தேவையான நடவடிக்கைகளை உடன் முன்னெடுக்குமாறு, கல்வி அமைச்சின் செயலாளர் எம்.சீ.எல்.பெர்ணாண்டோ, திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார். இதன்பிரதி, மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கும் அனுப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X