Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 நவம்பர் 10 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
ஹொரவப்பொத்தான- கெப்பித்திக்கொல்லாவ பிரதான வீதியில் கிவுளக்கடை பகுதியில் வானொன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து வவுனியாவுக்கு நேர்முகத் தேர்வு ஒன்றுக்காக சென்றவர்களே விபத்தில் சிக்கியுள்ளனர்.
வாகனம் வீதியோரம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்தவர்கள் ஹொரவப்பொத்தான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் 4 பேர் மேலதிக சிகிச்சைக்களுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சாரதியின் அசமந்தத்தினால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாமென கருதப்படுகிறது.
விபத்து தொடர்பில் விசாரணைகளை ஹொரவப்பொத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .