2025 மே 14, புதன்கிழமை

வான் விபத்து; 11 யுவதிகள் காயம்

Editorial   / 2017 நவம்பர் 28 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேசத்தில் ஆடைத் தொழிச்சாலையில் கடமையாற்றும் யுவதிகள் சென்ற கப் வாகனமொன்று, மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 யுவதிகள் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம், நேற்று  ( 27) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிண்ணியா, மணியரசன்  குள வீதியில் அதிக மழை காரணமாக  சறுக்கு ஏற்பட்டு இவ்விபத்து இடம்பெற்றதாக, வான் எல பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா, வான் எல பிரதேசத்திலுள்ள ஊழியர்களை ஏற்றிச்சென்ற போதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த யுவதிகள், கிண்ணியா தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் ஒருவர், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வான் எல பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X