2025 மே 08, வியாழக்கிழமை

விசேட ஆங்கில பாட வகுப்புகள்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 பெப்ரவரி 16 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்,அப்துல்சலாம் யாசிம்

திருகோணமலை  ரோட்டரிக்  கழகத்தின் சார்பில், மூதூர் கிழக்குப்  பிரிவில் உள்ள பள்ளிக்குடியிருப்பு இந்துக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு முதல் 5 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு விசேட அடிப்படை ஆங்கில பாட வகுப்புகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. 

மூன்று ஆசிரியைகள் ஆறு மாதங்களுக்கு இப் பாடநெறியை கற்பிப்பார்கள். இப்பாடத்திட்டத்தினால், 107 மாணவர்கள் பயன்பெற உள்ளார்கள்.  

கலைமகள் இந்துக் கல்லூரியின் முதல்வர் திரு.கிருஷ்ணதாஸ் அனைவரையும் வரவேற்றார்.

திருகோணமலை ரோட்டரிக் கழக உறுப்பினர்களான ஜெயரட்ணம், திருமுகம், அருட் தந்தை லக்ஷ்மன் பீரிஸ் மற்றும்  வைத்திய கலாநிதி ஞானகுணாளன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். 

சுவிட்சர்லாந்தின்  அர்லேஷெய்ம்  (Arlesheim)   ரோட்டரிக் கழகத்தில்  இருந்து,  நிதி சேகரித்த ரோட்டரி அங்கத்தவர்  திருமதி.லொட்டி  சிறப்பு  விருந்தினராக கலந்து கொண்டு, கூட்டத்தில்  உரையாற்றினார். இந்நிகழ்வில் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர். அனைத்து மாணவர்களுக்கும்,  கற்றல் உபகரணங்கள்  வழங்கப்பட்டன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X