2025 மே 14, புதன்கிழமை

விண்ணப்பங்கள் கோரல்

Suganthini Ratnam   / 2017 ஜூன் 22 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு வருடாந்த ஆசிரியர்     இடமாற்றத்துக்கான விண்ணப்பங்களைக் கிண்ணியா வலயக் கல்விப் பணிமனை கோரியுள்ளது.

இந்தக் கல்விப் பணிமனையின் கீழ் இயங்கும் 66 பாடசாலைகளிலும் கடமையாற்றும் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஒரே பாடசாலையில் 8 வருடங்களாகக் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கும் பாடசாலைகளின் ஆசிரியர் தேவைக்கும் இணங்க இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனக்  கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் அஹமட் லெப்பை தெரிவித்தார்.

இடமாற்றத்துக்கான பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தையும் அதன் பிரதியையும்  தாங்கள் கடமையாற்றும் பாடசாலை அதிபர் ஊடாக எதிர்வரும் ஜுலை 15ஆம் திகதிக்கு முன்னதாக வலயக் கல்விப் பணிமனைக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

மேலும், பாடசாலைகளில் 8 வருடங்களைப் பூர்த்திசெய்த ஆசிரியர்கள்; தொடர்பில் விண்ணப்பங்கள் அனுப்பாமல் இருந்து, அது தொடர்பில் தெரியவந்தால், அப்பாடசாலைகளுக்கு  பதில் ஆசிரியர் நியமிக்கப்படாமல்,  குறித்த ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .