2025 மே 05, திங்கட்கிழமை

விண்ணப்பம் கோரல்

Editorial   / 2018 நவம்பர் 07 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

சமூக சேவைகள் நலன்புரி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தில் இருவருட சமூகப்பணி  2019 / 2020 டிப்ளோமா பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

இலங்கை சமூகப்பணிக் கல்லூரியில் இந்த முழுவருட டிப்ளோமா பாடநெறியானது தமிழ், சிங்கள மொழிகளில் நடைபெறவுள்ளதாகவும் இதற்கான தகைமைகளாக கா.பொ.தா.சா/ தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியடைந்திருப்பதுடன் அரச, மாகாண உள்ளூராட்சி திணைக்களங்களில் மூன்று வருடகால திருப்திகர சேவையினை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

அரச ஊழியர்கள் தங்களது விண்ணப்பங்களை திணைக்களத் தலைவர் ஊடாக அனுப்பிவைக்க முடியுமெனவும், வயதெல்லை 20 - 46 க்கு இடைப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் மாதம் 12ஆம் திகதிக்கு முன்பு பதிவாளர், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகம், இல 488 A, நாவல வீதி, இராஜகிரிய எனும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு, பணிப்பாளர் நாயகம் திருமதி.ஷாமினி அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்களை பெற, 0112882506/7 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் அல்லது கடந்த வௌ்ளிக்கிழமை(02) வர்த்தமாணி பத்திரிகையை பார்வையிடுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X