Editorial / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.கீத், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அபயபுர பிரதேசத்தில், நெடுங்காலமாக இயங்கிவந்த விபசார நிலையமொன்று, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் நேற்று (03) மாலை சுற்றிவளைக்கப்பட்டது.
இதன்போது, விபசார நிலையத்தை நடத்திவந்த குற்றச்சாட்டில், திருகோணமலை - உவர்மலை பிரதேசத்தில் வசிக்கும் 31 வயது ஆணையும் வவுனியா – பூந்தோட்டத்தைச் சேர்ந்த 22 வயதுப் பெண்ணையும் கைதுசெய்ததாக, பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
கைசெய்யப்பட்டவர்களை, மேலதிக நடவடிக்கைகளுக்காக திருகோணமலை தலைமையகப் பொலிஸார் வசம் ஒப்படைத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
திருகோணமலை மாவட்டத்தில், இவ்வருடம் மாத்திரம் இதுவரை மூன்றாவது விபசார நிலையம் சுற்றிவளைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .