Editorial / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம், எம் எஸ் அப்துல் ஹலீம்
கொழும்பு - திருகோணமலை பிரதான வீதியில் பேராற்றுவெளி பகுதியில் மோட்டார் சைக்கிளிலும் டிப்பரும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவ வீரரான விக்ரமசிங்க (வயது 30) என்பவர் உயிரிழந்துள்ளாரென, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து வந்த டிப்பருடன், இராணு வீரர் பயணித்த மோட்டார் சைக்கிளில் இன்று (29) விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர், விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த காலப்பகுதிக்குள்ளேயே இவ்விபத்து இடம்பெற்றதாக விசாரணைகள் மூலம் தெரியவருகிறது.
சடலம், கந்தளாய் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

5 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
33 minute ago
1 hours ago