2025 மே 08, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; சாரதிக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 ஜனவரி 29 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை-புத்தளம் பிரதான வீதி மஹதிவுல்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதையடுத்து, லொறி சாரதியை, பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.

பேத்தாழை, வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.     

மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த கே.ராஐா திஸாநாயக்க (51வயது) என்பவரே விபத்தில் உயிரிழந்தவராவார்.

விபத்து குறித்து தெரியவருவதாவது,

பொருட்களை வாங்குவதற்காக ஹொரவ்பொத்தானை சென்று  வருகை தந்து, வீட்டுக்குச் செல்வதற்காக வேண்டி வீதியோரத்தில் நின்று கொண்டிருந்த போது, அவர் நின்று கொண்டிருந்த இடத்துக்கு முன்னால் முச்சக்கர வண்டியொன்று திருப்ப முற்பட்டுள்ளது.  

அவ்வேளை பிரதான வீதியால் வந்த லொறி, முச்சக்கர வண்டியை மோதியதில் வீதியோரத்தில் நின்றவரை, முச்சக்கர வண்டி மோதியமையால், இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X