Princiya Dixci / 2021 ஜனவரி 07 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஏ.எம்.ஏ.பரீட், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்
கிழக்கு மாகாணத்தில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஊடாக திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பதால் நேற்று (06) வழங்கப்பட்டன.
விளையாட்டு வீரர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாக இவை வழங்கப்பட்டதுடன் மேலும் மாகாணத்தில் உள்ள ஏனைய கழகங்களுக்கும் வழங்கப்படவுள்ளன.
இதில் மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் மற்றும் மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ஜே.ஜெனார்த்தனன் உட்பட பலரும் பங்கேற்றார்கள்.
9 minute ago
27 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
27 minute ago
44 minute ago
1 hours ago