2025 மே 14, புதன்கிழமை

‘விவசாயக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்’

அப்துல்சலாம் யாசீம்   / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை, ரொட்டவெவ கிராம விவசாயிகளின் விவசாய நிலங்களான சின்ன புளியம்குளம், பெரிய புளியங்குளம் உள்ளிட்ட விவசாயக் காணிகளைத் தேர்தலுக்கு முன்னர் விடுவித்துத் தருமாறு, மொறவெவ பிரதேச சபையின்  முன்னாள்  உறுப்பினர் ஏ.எஸ் எம் பைசர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் கோரிக்கையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம் மூலம் அவர் விடுத்துள்ளார்.

யுத்தத்துக்கு முன்னர் ரொட்டவெவ விவசாயிகள், புளியங்குளம் பகுதியில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் தற்போது வன இலாகா அதிகாரிகள், அவ்விவசாயக் காணிகளுக்குள் செல்ல வேண்டாமெனத் தடுத்துள்ளதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் அரசியல்வாதிகள் பல தடவைகள் கலந்துரையாடியும் இன்னும் மக்களுக்கு சிறந்த பெறுபேற்றைத் தரவில்லையெனவும் அவ்விவசாயக் காணியில் விவசாயம் செய்ய அனுமதியை பெற்று தருமாறும் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, கமநெகும, கநெகும திட்டங்களின் ஊடாக இந்த விவசாயிகளின் விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில், இரண்டு குளங்கள், கடந்த அரசாங்கத்தால் புனரமைப்பு செய்யப்பட்டதாகவும் மேற்படி கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X