Janu / 2025 ஒக்டோபர் 06 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்காக தொடர்ந்து 19 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை (05) அன்று திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது விவசாய காணிகளை தனியார் கம்பெனிகளுக்கு சூரிய மின் சக்திக்காக தாரைவார்க்கப்பட்டதையடுத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பில் அண்மையில் பிரதமர் அலுவலகம் முன் இடம்பெற்ற போராட்டத்தில் பிரதமருடனான சந்திப்பில் பத்து நாட்களுக்குள் தீர்வு தருவதாக கூறி பத்து நாட்கள் கடந்துள்ள போதிலும் எவ்வித பதிலும் இல்லை எனவும் இன்னும் இம் மாதம் 20ம் திகதி வரை காலக்கெடு வழங்குமாறும் பிரதமர் அலுவலகம் தெரிவித்ததாக முத்து நகர் ஒன்றிணைந்த விவசாய சம்மைளனத்தினர் தெரிவிக்கின்றனர்.
ஏ.எச் ஹஸ்பர்

8 hours ago
8 hours ago
28 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
28 Apr 2026