2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

வீடியோவை வாட்ஸ்அப் அனுப்பியவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ்

டிக்டாக் ஊடாக பதிவுசெய்யப்பட்ட சில வீடியோக்களை வாட்ஸ்அப் ஊடாக அனுப்பிய 36, 34 வயதுடைய இருவரதும் விளக்கமறியல், இம்மாதம் 18ஆம்  திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின்  வீடியோக்களை வாட்ஸ்அப்  ஊடாக மாவீரர் தினத்தன்று பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். 

ஏற்கெனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்த சந்தேக நபர்கள் இருவரையும் விடுவிக்குமாறு மூன்று சட்டத்தரணிகளால் மன்றில் கோரிய போது, உப்புவெளி பொலிஸார் எதிர்ப்பை தெரிவித்ததையடுத்து, திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க, மேற்படி இருவரின் விளக்கமறியலையும் நீடித்தார்.

சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், டிக்டாக் ஊடாக செய்யப்பட்ட வீடியோக்களையே அவர்கள் அனுப்பியதாகவும் அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் மன்றில் தெரிவித்தனர்.

இந்நிலையில், மாவீரர் தினத்தைக் கொண்டாடுவதை பல நீதிமன்றங்கள் தடைவிதித்து இருந்தபோதிலும் மக்களைக் குழப்பும் நோக்கில், இவ்வாறான வீடியோக்கள் அனுப்பப்பட்டமை மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் அமைப்பை மெருகூட்டுவதற்கு காரணமாக இருந்தவர்கள் எனவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X