2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வீடு புகுந்து வாள் வெட்டு; குழுவுக்கு வலைவீச்சு

Princiya Dixci   / 2020 நவம்பர் 18 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ எம் கீத் 

திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அன்புவெளிபுரம் பிரதேசத்தில் இன்று (18) நண்பகல் நால்வர் மேற்கொண்ட குழுவொன்று, வீடு புகுந்து மேற்கொண்ட வாள் வெட்டில் எண்மர் காயமடைந்துள்ளனர். 

அவர்களில் 34 வயதுடைய இளைஞர் ஒருவர், திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது வீட்டு வாசலில் நின்றிருந்த மேற்படி இளைஞன் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இளைஞனின் மாமா நியாயம் கேட்ட நிலையில் தாக்குதல் மேற்கொண்ட இருவர், மேலும் இருவரை அழைத்து வந்து, அவர்களது வீடு புகுந்து வாள் மற்றும் பொல்லுகளால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் என பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவத்தில் இளைஞன் படுகாயங்களுக்கு உள்ளானதுடன், 39, 65 வயதுப் பெண்கள் இருவர் உட்பட சிறுவர்கள் 5 பேரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனத் தெரிவித்த உப்புவெளி பொலிஸார், தாக்குதல் நடத்திய நால்வரையும் தேடி வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X