தீஷான் அஹமட் / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தோப்பூர் கிளையின் கீழ் இயங்கும் ஸக்காத் அமைப்பால் தோப்பூர் பிரதேசத்திலுள்ள 04 குடும்பங்களின் வீடுகள் புனரமைக்கப்பட்டு, நேற்று (09) பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிழ்வில் ஜம்மியத்துல் உலமா தோப்பூர் கிளைத் தலைவர் எஸ்.எ.நளீம் மௌலவி, தோப்பூர் ஸக்காத் அமைப்பின் தலைவர் ஆர்.எம்.றுபைஸ் மௌலவி, ஜம்மியா, ஸக்காத் அமைப்புகளின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.
வீடுகளைக் கட்ட ஆரம்பித்து, நிதி இல்லாத காரணத்தால் இடைநடுவில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 04 குடும்பங்களது வீடுகளே, இவ்வாறு புனரமைத்துக் கொடுக்கப்பட்டன.
இந்த வீடுகளது புனரமைப்புக்கென, சுமார் 7.5 இலட்சம் ரூபாய் நிதியுதவியை தோப்பூர் பிரதேசத்திலுள்ள தனவந்தர்கள் வழங்கியுள்ளனர்.
34 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
42 minute ago
1 hours ago