Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2018 பெப்ரவரி 19 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, நிலாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல்தீவுப் பகுதியில், வீட்டு உரிமையாளருக்கும் வீட்டில் வாடகைக்கு இருந்தவருக்குமிடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தில், வீட்டு உரிமையாளர் கத்திக் குத்துக்கு இலக்காகி, இன்று (19) காலை உயிரிழந்தாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர், சாம்பல்தீவு, 06ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கணகசிங்கம் கேதீஸ்வரன் (41 வயது) என அறிவிக்கப்படுகிறது.
சாம்பல்தீவு பாடசாலைக்கருகில் இருக்கின்ற வீட்டை வாடகைக்குக் கொடுத்து விட்டு, வாடகைப் பணத்தை வாங்குவதற்காகச் சென்ற போது, வீட்டில் வாடகைக்கு இருந்தவருடன் தார்க்கம் ஏற்பட்டதையடுத்து, வீட்டு உரிமையாளர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதனையடுத்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும், வீட்டில் வாடகைக்கு இருந்தவரைக் கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், நிலாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago