2025 மே 02, வெள்ளிக்கிழமை

வீதிகளுக்கு காபட் இடும் ஆரம்ப பணி

Editorial   / 2019 ஜூலை 09 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும்'ரண்மாவத்'திட்டத்தின் கீழ் வீதிகளுக்கு காபட் இடும் ஆரம்ப பணி   கிண்ணியா பைசல் நகர்_ பலாஹ் பள்ளியின் முன்  வீதியில்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த காபட் வீதிக்கான அங்குராரப்பண வைபவம் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.டீ.ஹரீஸ்  தலைமையில் நடைபெற்றது.

இவ் வீதியினை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப்   உத்திதோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான எம்.எம்.மஹ்தி, நிஸார்தீன் மொஹம்மட் , கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர்களான அஸ்மி, ராலியா, மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான றிபாஸ், ஜெஸீலா, தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர்களான தாலிப் அலி  , ரெஜீன், சேருவில பிரதேச சபை உறுப்பினர் அன்வர்,கந்தளாய் பிரதேச சபை உபதவிசாளர் சட்டத்தரணி முதார்,திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் பைரூஸ்  உட்பட கட்சி ஆதரவாளர்கள், ஊர்பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X