Freelancer / 2023 பெப்ரவரி 22 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
திருகோணமலை- குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நிலாவெளி, தாமரைக் குளம் மற்றும் வேலூர் முதலான பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் வெங்காய செய்கைக்குப் பதிலாக வேறு பயிர்கள் செய்வதாகவும் அதில் இலாபம் இல்லை எனவும் இதனால் வாழ்வாதார பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
வெங்காயச் செய்கைக்குப் பதிலாக மாற்றுப் பயிர்கள் செய்கின்றோம். யாழ்ப்பாணத்தில் விதை வெங்காயம் எடுக்க முடியாது, போக்குவரத்துச் செலவு அதிகம், யூரியா, எண்ணெய் பசளை விலை,
கூலியாக்களுக்கான கூலி அதிகம், டீசல் இல்லை, உழவு இயந்திர உழவுக் கூலி அதிகம் என்பனவற்றால் வெங்காய செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பயிர்களுக்கு நீர்பாய்ப்பது மின்சாரத்தின் மூலம் தான். தற்போது மின்சார கட்டணமும் அதிகரித்துள்ளது.
எனவே, வெங்காயச் செய்கைக்குப் பதிலாக ஏனைய வெண்டி, மிளகாய், கறி மிளகாய், மரவெள்ளி, கத்தரி பூசணிக்காய் முதலான பயிர்களை தாங்கள் மேற்கொண்டு வருவதாகவும் கூறுகின்றனர். (N)
13 minute ago
25 minute ago
30 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 minute ago
30 minute ago
38 minute ago