Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம், எப்.முபாரக்
அரசாங்கம் உறுதிமொழி வழங்கியது போன்று, தமக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தருமாறு கோரி, திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், கவனயீர்ப்புப் போராட்டமொன்றை, திருகோணமலை மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் இன்று (16) முன்னெடுத்தனர்.
நாட்டிலுள்ள 50,000 பட்டதாரிகளுக்கு, அரசாங்கம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ள நிலையில், புறகணிக்கப்பட்ட மேலும் 10,000 பட்டதாரிகள் வேலைவாய்ப்பில் இணைத்துக்கொள்ளப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியதுடன், துரித கதியில் தமக்கான வேலைவாய்ப்யை வழங்குமாறும் வலியுறுத்தினர்.
“அரசாங்கமே பட்டதாரிகளை ஏமாற்றாதே”, “தொழில் வாய்ப்பை விரைவுபடுத்து”, “ஈ.பி.எப், ஈ.டி.எப் எவ்வாறு அரசாங்கத்துக்கு சுமையாக மாறியது?”, “அநீதிக்கு எதிராகப் போராடுவோம்” போன்ற வாசகங்களை, போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் ஏந்தியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
17 May 2025
17 May 2025