Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அப்துல்சலாம் யாசீம் / 2018 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா, தள வைத்தியசாலையில் கடமையாற்றிய (VP) விஷேட வைத்திய நிபுணர் மேற்படிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளமையால், நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந் நடவடிக்கையினால், தினமும் பல நோயாளிகள் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதோடு, இதனால், நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர்,
இந்த நிலைமையினை, கருத்திற் கொண்டு, கிண்ணியா உலமா சபை, வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம், என்பவற்றின் அனுசரணையோடு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளரோடு தொடர்பு கொண்டு அருகிலுள்ள வைத்தியசாலை விஷேட வைத்திய நிபுணரை இணைப்புச் செய்தல் தொடர்பாகவும்
உடனடியாக நிரந்தர விஷேட வைத்திய நிபுணரை நியமித்தல் தொடர்பாகவும் கலந்துறையாடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
கிண்ணியா பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று அரசியல்வாதிகள், திருகோணமலை மாவட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் இருந்தும் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசமான கிண்ணியாவிற்கு விஷேட வைத்திய நிபுணர் இல்லாமை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளதாகவும் நோயாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, கிண்ணியா தள வைத்தியசாலை, மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை, திரியாய் மத்திய மருந்தகம் போன்ற வைத்தியசாலைகளை தயமுயர்த்தி அதில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்திக்க அரசியல்வாதிகளும், சுகாதார திணைக்கள அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago