2025 மே 05, திங்கட்கிழமை

வைத்தியர் தட்டுப்பாடு; நோயாளர்கள் சிரமம்

தீஷான் அஹமட்   / 2018 நவம்பர் 01 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் தள வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை நிலவுவதால் வைத்திய சேவையைப் பெற வருகின்ற நோயாளர்கள் பெறும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வைத்தியசாலையில் மூதூர், தோப்பூர், சம்பூர், பட்டித்திடல், கிளிவெட்டி, சேருவில, ஈச்சிலம்பற்று உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நாற்பதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்..

மூதூர் தள வைத்தியசாலையில் 47 வைத்தியர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்ற போதும் தற்போது 17 வைத்தியர்கள் மாத்திரமே கடமை புரிகின்றனர்.

எனவே, நோயாளர்களனதும் வைத்தியர்களினதும் நலனை கருத்தில்கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X