2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்ட நோயாளிக்கு மறியல்

Princiya Dixci   / 2017 மார்ச் 01 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்டு வந்த மனையாவெளிப் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நோயாளியை, எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எச்.எம்.ஹம்ஸா, இன்று (01) உத்தரவிட்டார்.

மாரடைப்புக் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் 17ஆம் வார்ட்டில் சிகிச்சை பெற்று வந்த இந்நபர், நோயாளர்கள் பார்வையிடும் நேரத்தில் வைத்தியசாலைக்கு வெளியில் சென்று ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 அழைப்புக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, திருகோணமலை தலைமையகப் பொலிஸாரால் இவர் கைதுசெய்யப்பட்டார்.

குறித்த நோயாளி, சிறைச்சாலைப் பாதுகாப்பில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X