Princiya Dixci / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா, எப்.முபாரக்
திருகோணமலை -தம்பலகாமம் சிவப்பு பாலத்துக்கருகில் ஹக்க பட்டாசு நான்குடன் கைதுசெய்யப்பட்ட 44 வயதுடைய நபரை, எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் பதில் நீதவான் ருவான் திசாநாயக்க, இன்று திங்கட்கிழமை (22) உத்தரவிட்டார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், நான்கு பிள்ளைகளின் தந்தையான தம்பலகாமம் - முள்ளியடிப் பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பிலிப்குமார (44 வயது ) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை தம்பலகாமம் - சிவப்பு பாலத்துக்கருகில் வயலுக்கு காவலுக்காகச் செல்லும் வேளையில் பன்றி வேளான்மைக்குள் வந்து தொல்லை கொடுப்பதைக் குறைக்கும் வகையில் இவ்வெடி பொருளைப் பயன்படுத்தியதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
ஹக்க பட்டாசை, இவர் தொடர்ச்சியாகப் பாவிப்பதாக பொலிஸ் நிலையத்துக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து இவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026