2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஹர்த்தாலில் கல்வீசியவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 மே 13 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம், அப்துல் சலாம் யாசீம்  

 

திருகோணமலையில், அரசாங்க பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தி, அரசாங்கச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேலு, நேற்று (12) மாலை உத்தரவிட்டார்.  

கடந்த வெள்ளிக்கிழமை, திருகோணமலை மாவட்டத்தில் சில பகுதிகளில், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.  

இதன்போது, பயணிகளை ஏற்றிச் சென்ற, அரசாங்கத்துக்குச் பஸ் மீது, ஐந்தாம் கட்டைப் பகுதியில் வைத்து, கல்வீச்சுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, தாக்குதல் மேற்கொண்ட நபர், சீனக்குடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.  இந்நிலையிலேயே, இவர் ​விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X