2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

எப். முபாரக்   / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், நூற்றி பத்து  மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை , அடுத்த வருடம் ஜனவரி மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று(30) உத்தரவிட்டார்.         

திருகோணமலை, பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.     

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,                  

குறித்த சந்தேக நபர் ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை செய்து வருவதாக,  திருகோணமலை போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போதே, நூற்றி பத்து மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கைப்பற்றியதோடு, சந்தேக நபரையும்  வெள்ளிக்கிழமை (29) இரவு கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், சந்தேக நபரை பொலிஸார், திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியப் போதே, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X