2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

ஹெரோய்னுடன் ஒருவர் கைது

Editorial   / 2017 நவம்பர் 04 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை, சமுத்ராகம பகுதியில் 60 மில்லிகிராம் ஹொரோய்னுடன் நபரொருவரை, இன்று (04) கைதுசெய்துள்ளதாக, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஜ.ஜனூஷன் தெரிவித்தார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், திருகோணமலை, கப்பல்துறை 6ஆம் கட்டையைச் சேர்ந்த சாந்த  அன்தோனிலாகே சிசிற குமார (45 வயது) எனவும் அவர் தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து சந்தேகநபரை சோதனையிட்ட போது, ஹொரோய்ன் 60 மில்லி கிராம் கைப்பற்றப்பட்டதாகவும் சந்தேக நபரை, திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

சந்தேகநபரை, திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X