2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஹெரோய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

எப். முபாரக்   / 2020 ஜனவரி 28 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 40 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் ஒருவரை, இன்று (28) அதிகாலை கைது செய்துள்ளதாக, துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

மாசும்புர, குருணாகல் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர், குருணாகலையிலிருந்து திருகோணமலை பகுதிக்கு பயணிகள் பஸ்ஸொன்றில் ஹெரோய்ன் போதைப்பொருளை உடைமையில் வைத்து கொண்டு சென்ற போதே, துறைமுக குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேகை நபரைப் பிடித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 40 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாகவும் சந்தேக நபரைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .