2025 மே 03, சனிக்கிழமை

தனியார் மருத்துவ பல்கலை நிறுவுதலுக்கு எதிர்ப்பு;நான்கு பேர் கைது

Super User   / 2010 நவம்பர் 06 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(காந்த்ய சேனநாயக்க)

தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் நாட்டில் நிறுவுவதற்கு எதிராக மாத்தறையில் துண்டுப்பிரசுரம் விநியோகித்த அகில இலங்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நான்கு செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டமையை அச்சங்கம் கண்டித்துள்ளது.

மருத்துவ பீட மாணவர்கள் பொலிஸாரின் கட்டுப்பட்டிலிருந்தபோது அவர்களின் தொலைபேசிகள் செயலிழக்கச் செய்யப்பட்டு பல மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அகில இலங்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

விநியோகிக்கப்படவிருந்த பெருந்தொகையான துண்டுப்பிரசுரங்களை பொலிஸார் கைப்பற்றியதுடன், இனிமேல் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கக்கூடாது என மாணவர்கள் எச்சரிக்கப்பட்டதாகவும் அச்சங்கம் தெரிவிக்கின்றது.

நாட்டில் தனியார் பல்கலைக்கழகம் நிறுவ வேண்டிய அவசியமில்லை. தனியார் பல்கலைக்கழகம் நிறுவுவதற்கு எதிரான தமது பிரச்சாரம் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு மத்தியிலும் தொடரும் என அச்சங்கத்தினர் குறிப்பிட்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X