2025 மே 03, சனிக்கிழமை

மது – போதைப் பொருட்பாவனை மற்றும் புகைத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடகவியலாளர் கருத்தரங்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 25 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

மது மற்றும் போதைப் பொருட்பாவனை, புகைத்தல் பழக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், போதைப் பழக்கத்துக்குட்படுவதைத் தவிர்ப்பதைப்பற்றி ஊடகங்களின் வாயிலாக அறிவுறுத்துதல் என்ற அடிப்படையில் போருட் நிறுவனம் கொழும்பில் ஒரு கருத்தரங்கை கடந்த வாரம் நடத்தியுள்ளது.

போருட் தொண்டர் நிறுவனமும் மாஸ் மீடியா போரமும் இணைந்து நடத்திய இந்தக் கருத்தரங்கில் போதைப் பொருட்பாவனையாலும் மது மற்றும் புகைத்தலினாலும் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் இவற்றைத் தடுப்பதில் ஊடகங்கள் ஆற்ற வேண்டிய பங்கைப்பற்றியும் அந்தப் பங்களிப்பின் முறைமைகளைப் பற்றியும் அமர்வின்போது எடுத்துரைக்கப்பட்டது.

இந்த அமர்வுக்கு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமிருந்தும் அழைக்கப்பட்டிருந்த 128 ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தென்பகுதி மக்களின் பிரச்சினைகளை ஊடகங்களின் வழியாக வெளியுலகுக்குக் கொண்டு வந்தமைக்கான சிறப்பு விருது களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த கருணாரட்ண கமகேவுக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான காசோலையை போருட் நிறுவனத்தின் அதிகாரி ரவி வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X