Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Super User / 2011 பெப்ரவரி 01 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஒலிந்தி ஜயசுந்தர)
கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தம் காரணமாக உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் முகமாக சுனாமி நூதனசாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக கலாச்சார அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க தெரிவித்தார்.
ஹிக்கடுவ பெரலிய புகையிரத பாதைக்கும் புத்தர் சிலை ஒன்றுக்கும் அண்மையாக மூன்று ஏக்கர் காணியில் நூதனசாலை அமையவுள்ளதாக அவர் கூறினார்.
2004ஆம் சுனாமியின் போது பெரலியவிலுள்ள புகையிரத பாதை கடுமையாக சேதமாக்கப்பட்டு பெரும் அனர்த்தத்துக்கு காரணமாயிற்று. இலங்கை மக்களுக்கு சுனாமி முதல் அனுபவமாக இருந்தது.
அத்துடன் இது மாறாத வடுக்களையும் விட்டு சென்றது. இதுவே நூதனசாலை அமைப்பதன் காரணம் என ரி.பி.ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.
வெளிநாட்டு நிபுணர்கள் உட்பட பலர் நீண்ட காலமாக நூதனசாலை அமைய வேண்டியதன் அவசியத்தை கூறியிருந்தனர் என அவர் தெரிவித்தார்.
இந்த நூதனசாலையோடு ஒரு நூலகமும், பொழுதுபோக்கு வசதிகளும் அமையும் என ஏக்கநாயக்க கூறினார்.
இதற்கான செலவு 400 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதியை திறைசேரி வழங்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
சுனாமி நூதனசாலையை மொறட்டுவ பல்கலைக்கழகம் வடிவமைத்து வருவதாகவும் விரைவில் கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
4 hours ago