2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Super User   / 2012 பெப்ரவரி 14 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

எரிபொருள் விலையேற்றத்தையடுத்து தமது வாழ்க்கைச் சுமையை குறைக்குமாறு வலியுறுத்தி, றுகுணு பல்கலைக்கழகம் மற்றும் செயலாற்றுகை பல்கலைக்கழக மாணவர்கள் தமது வளாகங்களுக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இம்மாதத்திலிருந்து தமது விடுதிக்கட்டணத்தை அதிகரிக்கப்போவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தமக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக றுகுணு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் நந்திக குணசேகர கூறினார்.
விடுதிகளை பராமரிக்க பணம் தேவையாக உள்ளதால் இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது அவர் தெரிவித்தார்.

'வசதி குறைந்த மாணவர்கள்மீது இது மேலும் சுமை ஏற்;றுவதாக உள்ளது. றுகுணு பல்கலைக்கழகத்தில் வலுக்குறைந்த மாணவர்கள் கல்வி கற்கின்றனர். விடுதிக் கட்டண அதிகரிப்பால் இவர்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவர் என அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X