2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

கபிலவஸ்து புனித தாது திஸ்ஸமகாராமை ரஜமகா விகாரைவில் வைக்கப்பட்டுள்ளது

Super User   / 2012 செப்டெம்பர் 05 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.இஸட்.எம்.இர்பான்)

மாத்தறையிலிருந்து விசேட ஹெலிகொப்டர் மூலம் வீரவிலை விமான படை விமான நிலையத்திற்கு இன்று புதன்கிழமை காலை கொண்டு வரப்பட்ட கபிலவஸ்து புனித தாதுவினை ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொறுப்பேற்றார்.

விசேட பாதுகாப்பு வாகனத்தினூடாக திஸ்ஸமகாராமை ரஜமகா விகாரைக்கு கொண்டு வரப்பட்;ட கபில வஸ்து புனித தாது பிக்குகளின் சமய வழிபாடுகள் தரிசனத்தின் பின்பு மக்கள் தரிசனத்திற்காக திஸ்ஸமகாராமை ரஜமகா விகாரையின் புராதன தாது மந்திரவில் வைக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை, பதுளை, வெல்லவாய, எம்பிலிபிடிய மற்றும் கதிர்காமம் ஆகிய பிரதேசங்களிலிருந்து மக்கள் வருகை தந்து கபிலவஸ்து புனித தாதுவினை தரிசிக்கின்றனர். இவர்களுக்காக விசேட போக்குவரத்து சுகாதாரம் மற்றும் தானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .